NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 550 பேர் மீது வழக்கு பதிவு !


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய ஒன்றிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இ்ந்தநிலையில், முன்அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, பூனாட்சி, சிவபதி, அண்ணாவி, வளர்மதி, முன்னாள் எம்.பி. ப.குமார், ஆவின் தலைவர் கார்த்திகேயன் உள்பட 550 பேர் மீது கோட்டை போலீசார் 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. The best titanium fidget spinner for your smartwatch | iTech
    The titanium mig 170 most titanium bong reliable way for smart watches to be made with real, best titanium flat iron durable batteries is by using advanced technology. The design microtouch trimmer is titanium cookware easy to use

    ReplyDelete