NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் !

தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 



முன்னதாக மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெல்பேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று பார்வையிட்டார். பள்ளிகளுக்கு உணவை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் காலை உணவு தொடக்க நிகழ்ச்சிக்காக மதுரை கீழஅண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்றார்.  பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டார். 

அப்போது காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி வழங்கப்பட்டது. இதனை ருசித்து சாப்பிட்ட மு.க.ஸ்டாலின் அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பள்ளி குழந்தைகளுக்கும் உணவை ஊட்டி மகிழ்ந்தார். அப்போது குழந்தைகளிடம் உணவு ருசியாக இருக்கிறதா? என்று கேட்டார். குழந்தைகளும் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். சிறப்பாக படித்து சமுதாயத்தில் பெரியவர்களாக உருவாக வேண்டும் என்று குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். 


Post a Comment

1 Comments

  1. If you need to discover what the newest bonuses are free of charge spins on-line casino bonuses, you are able to to} do} it right here. All RNG’s are continuously examined by native authorities to verify the player has a fair probability of successful. There is not any manipulation happening and all video games offered by respected operators are secure. The certificates issued to casinos which have passed the RNG checks identified as} Technical Systems Testing, so make sure to look it up on casino homepage. There are hundreds of great casino bonuses available these days so you'll be able to|you possibly 우리카지노 can} try things out with out risking your individual money. There are several of} ways you'll be able to|you possibly can} earn free spins when half in} slots on-line.

    ReplyDelete