google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சி தாராநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் !
NEWS UPDATE *** வக்ஃபு மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி தாராநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் !

பாரதிய ஜனதா கட்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகர் மாவட்டம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும், மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை விளக்கியும், 2024-2025 க்கான மத்திய பட்ஜெட் விளக்கத்தை பொதுமக்களுக்கு விளக்கி சொல்லும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று 10.08.24 மாலை கீரைக்கொல்லை தாராநல்லூரில் நடைபெற்றது. 









இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பொருளாதார பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஒண்டிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட பொருளாளர் செல்லதுரை, மண்டல நிர்வாகி சதீஷ், கோட்ட அமைப்பு பெரியசாமி, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் சங்கீதா, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சன். மாரியப்பன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மகேந்திரன், புதிய தொழில் முனைவோர் பிரிவு மாவட்ட தலைவர் தாய்மணி, மலைக்கோட்டை மண்டல தலைவர் அஜய், பொன்மலை மண்டல தலைவர் சி. பி. அருண், மாநில பிரச்சார பிரிவு சத்யன், பாலக்கரை மண்டல தலைவர் செல்வராஜ், மகளிர் அணி பொது செயலாளர் மலர்கொடி, பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் பாலன், மார்க்கெட் மண்டல நிர்வாகி அசோக்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஆ. முரளி, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மார்க்கெட் மண்டல தலைவர் பழனிகுமார் நன்றி தெரிவித்தார்.

**********

 
L.பாபு

தலைமை செய்தியாளர்

 


Post a Comment

0 Comments