இன்று மாலை திருச்சி திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் நேதாஜி நகர் பிரிவு சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார், காட்டூர் மண்டல் தலைவர் பால தண்டாயுதம் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பட்ஜெட் பற்றிய விளக்கங்களை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் சமீபத்தில் இயற்றப்பட்ட வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவின் நிலையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் காளீஸ்வரன், ரவிக்குமார், எஸ். பி. சரவணன் முன்னாள் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன் மாவட்ட துணை தலைவர் சர்வேஸ்வரன் பாலன் பார்த்திபன் மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்கள்.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments