பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் School Expo திருச்சி தில்லைநகர் 11வது கிராஸில் உள்ள ஆச்சாரியா பாலசிக்க்ஷா மந்திர் பள்ளியில் ஜூன் 2024 01.06.2024 மற்றும் 02.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆச்சாரியா பள்ளியின் கற்றல், கற்பித்தலின் பல்வேறு ஒருமித்த நுணுக்கங்களின் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. கல்வியோடு, மாணவர்களின் சுய சிந்தனை, திறமைகள் மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் ஆச்சாரியாவின் கல்விசார் பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாண்டிச்சேரி, காரைக்கால், விழுப்புரம், ஈரோடு, தேங்காய்த்திட்டு, வில்லியனூர், சென்னை, எட்டிமடைப் போன்ற பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றி வரும் ஆச்சாரியா பாலசிக்க்ஷா மந்திர் பள்ளி இப்போது திருச்சியில் கே.சாத்தனூர் கே.கே.நகர் மற்றும் தில்லைநகரில் தனது வெற்றிக்கொடியை நாட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
***
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்
0 Comments