google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு !
NEWS UPDATE *** தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: “சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் எப்படி தவறுக்கு பொறுப்பேற்க முடியும்?” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு !

கேரளா மாநிலத்தில் தேசிய  அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில்திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை  சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் 17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் திருச்சி பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி P.K பவதாரனி 800 மீட்டர் முதல் இடம் (தங்கம்)  1500 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 4×100 மீட்டர் ரிலே முதல் இடம் (தங்கம்)  பதக்கங்களையும் 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் திருச்சி பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி S கிர்த்திகா 200 மீட்டர்  முதல் இடம் (தங்கம்) 400மீட்டர் முதல் இடம் (தங்கம்) 600 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 4 ×100 ரிலே இரண்டாம் இடம் (வெள்ளி) பதக்கங்களை வென்றனர்.









 திருச்சி ரயில் நிலையத்தில்  இவர்கள் அனைவருக்கும்  பயிற்ச்சியாளர் விளையாட்டு வீரர்கள் பெற்றோர்  பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாற்றம் அமைப்பின்   சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ்   ரயில்வேதுறை அலுவலக  கண்கானிப்பாளரும் தேசிய தடகள விளையாட்டு வீரருமான தமிழரசன் தடகள பயிற்ச்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர் சேகரன் ஒயிட் ரோஸ் பொதுநல சேவை அமைப்பின் தலைவர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் & தின சேவை அறக்கட்டளையின் நிர்வாகி சிவபிரகாசம் கண்ணன் அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார் பெட்காட் அமைப்பின் செயலாளர் கார்த்தி டேனியல் சாக்ஸிடு அமைப்பின் ஆலோசகர் சசி மண்ணுக்கும் மக்களுக்கும் அமைப்பின் திருச்சி கிளை ஒருங்கிணைப்பாளர் கேசவன்  மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா   மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

Post a Comment

0 Comments