NEWS UPDATE *** "Party fund தொடர்பாக கண்டிப்பாக வழக்கு தொடுக்கப்படும்" - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி செயலாளர் மாரியப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்



திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் லஞ்சம்  பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 






திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது அக்கா கணவர் அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ஏ.ஆர்.கே நகரில் கட்டிடம் கட்டிய வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்து தரக்கோரி பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பனை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த பஞ்சாயத்து செயலாளர், ரூ.25,000/- லஞ்சம் கேட்க, கார்த்திகேயன் அவ்வளவு தர இயலாத நிலை ஆகையால் அந்தத் தொகைக்கு பதிலாக ரூ.15,000 தருகிறேன் கொஞ்சம் இறங்கி வாருங்கள் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரூ.15,000/-ஆக குறைத்து கேட்டுள்ளதை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து செயலாளர், தொகையை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் (23.06.2026) இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டி எஸ் பி மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் லஞ்சப்பணம் ரூ.15,000/-ஐ கார்த்திகேயனிடமிருந்து கேட்டு பெற்று வைத்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். 

இது தொடர்பாக திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாயத்து செயலாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments