சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்தவர்களுக்கு டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர அழைப்பு
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேருவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜீலை 2022, பருவத்தில் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வானது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத்தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-07-2022 அன்று 11½ வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-07-2009 –க்கு முன்னதாகவும் 01-01-2011-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச்சாலை, பூங்காநகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 30.10.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in –ல் பார்க்கவும். மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தொலைபேசி எண் 0427-2902903 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தெரிவித்துள்ளார்.
=============
ஆத்தூர்.ர.மாலிக்
சேலம் மாவட்ட செய்தியாளர்

0 Comments