குமாரானந்தபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர், இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். நள்ளிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாலமுருகன் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துபோது 3 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்


0 Comments