திருச்சி மாவட்டம் அரியமங்கலம் எஸ்ஐடியில் இருந்து அம்பிகாபுரம் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் டூவீலருடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவரது பெயர் அம்ஜத் அலி என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. இவர் எந்த ஊரைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. மேலும் இறந்த நபர் நேற்று இரவு மது போதையில் டூவீலரை ஓட்டி வந்தபோது நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ் ஐ டி அம்பிகாபுரம் சாலையில் போதிய மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் அங்குள்ள வளைவில் வந்துபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் அபாய நிலை உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மின்விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வளைவு பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


0 Comments