NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை திருச்சி எஸ்.பி.யிடம் மனைவி, மகன் கண்ணீர் புகார்

 திருச்சி ஜுலை 2-

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர் இன்று தனது மகன் புவனேஸ்வருடன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-



எனது கணவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவருக்கும் எங்களுக்கும் பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்தது பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயர் நீதிமன்றம் மூலம் உரிமையை பெற்று அனுபவித்து வந்தோம் இந்த முன் விரோதத்தில் அந்த நபர் மற்றும் அவரது மகன் மனைவி மருமகன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி எனது மூத்த மகன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது வழிமறித்து பிரச்சனை செய்தனர் இதனை தட்டி கேட்ட எனது தலையில் கல்லால் தாக்கினர் 



இது தொடர்பாக புகார் அளிக்க எனது கணவர் வேல்முருகன் மற்றும் இளைய மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது நான்கு பேர் கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். ஆனால் இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர் கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்யாமல் உள்ளனர்

ஆகவே சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்

Post a Comment

0 Comments