கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது . இதே குவாரிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குவாரி முறைகேடாக செயல்பட்டு வந்தது.
இந்த கனிம வளம் கொள்ளை போவதை களத்திற்கு சென்று செய்தியாக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் , வழக்கறிஞர் திருமலைராஜா, சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு ஆகியோர் மீது கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
50 பேர் கொண்ட கும்பல், நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின் படுகாயங்களுடன் 4 பேரும் மீட்கப்படனர்.
காயம் அடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்திற்க்கு தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம் . மேலும் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்



0 Comments