NEWS UPDATE *** தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு. பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோவில் மகா சிவராத்திரி மற்றும் உற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோவில் மகா சிவராத்திரி மற்றும் உற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.








 இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.  இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கிழக்கு வட்டாட்சியர் மனேஷ்குமார், அரசு தரப்பு வழக்கறிஞர் வீரராகவன், ஒத்தவீடு பிரவீன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

Post a Comment

0 Comments