NEWS UPDATE *** 'ஒரு சின்ன ரெக்வஸ்ட்..' எனக்காக உங்க வீட்டு வாசல்ல 'விசில்' சின்னத்தை கோலமா போடுங்க... பெண்களிடம் கோரிக்கை வைத்த விஜய்.! கத்தி ஆரவாரம் செய்த நிர்வாகிகள் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்



திருச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்






தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்க உரையை அறிவுச் செல்வம் வாசித்தார். ஆண்டு அறிக்கையை மணிவண்ணன் வாசிக்க, வரவு செலவு அறிக்கையை அருண்குமார் தாக்கல் செய்தார். தீர்மானங்களை மால் முருகன் முன்மொழிந்தார்.

இக்கூட்டத்தில், ராஜரெத்தினம், பாலசந்தர், நல்லுச்சாமி, நாகராஜ், செந்தில் ராம்குமார், சரவணன், சீனிவாசன், முருகன், கைலாச சுந்தரம், இரா.ஆல்பர்ட், டேவிட் முத்துராஜ், விவேக், அறிவழகன், சுசிந்திரன் மலைச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற உள்ளாசி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக திண்ணாயிர மூர்த்தி வரவேற்புரையாற்ற, முடிவில் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments