NEWS UPDATE *** அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மூண்ட போர் காரணமாக துபாய், அபுதாபியை விட்டு வெளியேற மக்களுக்கு ஈரான் எச்சரிக்கை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி இளமின் பொறியாளர் ரூ 3000 லஞ்சம் வாங்கியதால் கைது !

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா கோம்பையை  சேர்ந்த முத்து என்பவர் அவருடைய விவசாய நிலத்திற்க்கு   இலவச மின் இணைப்பு வேண்டி தாட்க்கோ மூலம் விண்ணப்பம் செய்திருந்தார் . அதற்க்கான நிதி  தாட்க்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது  . மின் இணைப்பு வழங்க கால தாமதம் ஆனதால் இது தொடர்பாக கடந்த 27.02.2026  அன்று புகார்தாரர் முத்து என்பவர் செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின்  பொறியாளர் அலுவலகத்திற்க்கு வந்து இளமின் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலதிற்க்கு  இலவச மின் இணைப்பு வழங்க ரூ 3000  கேட்டுள்ளார் . லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத  புகார்தாரர் முத்து  நேற்று 27.02.2026 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 



 இன்று 28.02.2026 திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் குழுவினர்களுடன் இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம்  ரூ 3000 த்தை  புகாரதாரரிடம் கொடுத்தனுப்பி  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது திருச்சி மாவட்டம் துறையூர் 110 கி. வோ துணை மின் நிலைய அலுவலகத்தில் வைத்து  செங்காட்டுபட்டி இளமின் பொறியாளர் ராஜு இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம்  ரூ 3000 த்தை முத்து  என்பவரிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு  கைது செய்யப்பட்டுள்ளார் . 

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Post a Comment

0 Comments