NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.

 

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 22) என்பவரை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.



இதே போன்று உறையூர் குறத்தெரு பகுதியில் கஞ்சா விற்ற தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26)என்பவரை உறையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.மேலும் இவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

0 Comments