NEWS UPDATE *** கரூர் நெரிசல் - அரசுப்பணி வழங்கியது ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சர்வதேச மகளிர் தின விழா

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் , நுகர்வோர் விழிப்புணர்வு  உரிமை இயக்கம் , ஸ்ரீதேவி ஹெல்த் கேர் டிரஸ்ட் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா இன்று காலை 10:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .



இந்நிகழ்வில் ஸ்ரீ ஸாது ஆஸ்ரம் தலைமை குரு M.ஜெயராம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் பி. சுவேந்திரன் தலைமை தாங்கினார். 



மாநில அமைப்பாளர் ஆ.ராஜன் வரவேற்புரையாற்றினார். சத்தியம்  அறக்கட்டளை நிறுவனர் அமாவாசை முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் சின்ராஜ்,  கலைப்புல தலைவர் பாரதிதாசன் , பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் என். முருகேஸ்வரி , சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சிவசங்கரன். இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் ஜி.எம். எழில் ஏழுமலை, தண்ணீர் அமைப்பின் இணை செயலாளர் மற்றும் சமூக சேவகர் ஆர் .கே. ராஜா. ஜோதி பீடம் இணை செயலாளர் பி. பரமேஸ்வரி , வழக்கறிஞர் கோமதி ,வழக்கறிஞர்  சுதா ஆகியோருக்கு சாதனைப் பெண்களுக்ககான விருதுகளை நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் அனைத்து இந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக தேசிய தலைவர் வழக்கறிஞர் ஜே கார்த்திக் ஈஸ்வரன் வழங்கினார். வழக்கறிஞர் எஸ்.சுதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 



ஸ்ரீதேவி ஹெல்த் கேர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பி. தேவி நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments