திருச்சி காட்டூர் பிலோமினாள் ஆலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஈஸ்டர் வாழ்த்து கூறி வாக்கு சேகரிப்பு
திருவெறும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று காட்டூர் பகுதியில் அமைந்துள்ள புனித பிலோமினாள் ஆலயத்தில் நடைபெற்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா (Easter) ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களிடம், அமைச்சர் தனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்களிடம் வரவிருக்கும் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஆண்டவரின் திருஉருவச் சிலையை வணங்கி தனது பணியை தொடர்ந்தார். இந்நிகழ்வின் போது மாநகரக் செயலாளர்மு. மதிவாணன் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


0 Comments