NEWS UPDATE *** உள்துறை அமைச்சர் பாதுகாப்பில் குறைபாடு - 5 அதிகாரிகள் இடைநீக்கம் மேற்கு வங்கத்தில் அமித்ஷா சென்ற வாகன பேரணியில் பாதுகாப்பு குறைபாடு. போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் அதிரடி இடைநீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

ஏப், 6,

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா திங்களன்று  நடைபெற்றது.




கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் புதிய தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி  திறந்து வைத்து, மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது திருஉருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


அதனை தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .




இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற எம்.பி அருண்நேரு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம்,

மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் வேட்பாளர் துரைராஜ், துறையூர் வேட்பாளர் விச்சு லெனின் பிரசாத் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments