NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரிப்பு


7.04.2026

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாள் அவர்கள் இன்று  மாலையில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகிலும் தெற்கு காட்டூர் அருகிலும். கீழ கல்கண்டார்கோட்டை பகுதியிலும்.. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் அவர்களை. ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.




வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி திருச்சி திருவெறும்பூர் தொகுதி மக்களின் பத்தாண்டு கால அடிமை விலங்கு உடைத்து மாற்றத்துக்கு தயாராகும் நாள் என பேசினார்

இந்த நிகழ்வின் போது அதிமுக திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி,பகுதி செயலாளர் பாஸ்கர்,அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தெய்வ மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சாந்தி கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments