NEWS UPDATE *** காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ அதிகாரிகள் முகாம் - தமிழக அரசு அறிவிப்பு! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165


 மும்பையில் இருந்து நாகர்கோயில் செல்லும் திருச்சி ரெயிலில் போதை பொருட்கள் கடத்தல் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர்


மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் ரெயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வரை சோதனை செய்தனர். அப்பொழுது திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசின் தமிழக அசிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , முதல் நிலைக் காவலர் கண்ணதாசன், மற்றும் காவலர் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் நின்ற ரயிலில் சோதனை மேற்கொண்டனர் .




அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேப்பாறட்டு கிடந்த பையை சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன.இதை அடுத்து ரயில்வே போலீசார் அந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்து பார்த்தனர் அப்பொழுது அந்த பையில் இ 7கிலோ எடை போதைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

Post a Comment

0 Comments