NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

திருச்சியில் இன்று தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டம் திருச்சியில் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சியில் டி .என். ஏ .யு. டி .ஏ .தலைவர் O.மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து டி. என். ஏ. யூ. டி. ஏதலைவர் டாக்டர் R.பிரபாகரன் தலைமை உரையாற்றினார் .அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்து ஆசிரியர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார் .




கூட்டத்தின் நிகழ்வுகளை பொதுச் செயலாளர் டாக்டர் R. உதயகுமார் கண்காணித்து வழிநடத்தினார். கூட்டத்தின் போது டி. என். ஏ. யூ. டி .ஏ ..சங்கத்தின் பொருளாளர் டாக்டர் M. ரங்கசாமி சங்கத்தின் நிதி நிலையை விளக்கி கணக்குகள் பற்றியும்,மற்றும் செலவினங்களின் தற்போதைய நிலை குறித்தும் உறுப்பினர்களுக்கு அறிக்கையாக வழங்கினார்.  இறுதியாக டாக்டர் P.கிஷோரி நன்றியுரை வழங்கினார்.


 கூட்டத்தில் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உள்வாங்கல் மற்றும் தொழில் முன்னேற்றத் திட்டம் தொட.ர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது .

 உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் நடை பெற்ற விரிவான ஆலோசனைக்குப் பிறகு நிலுவையில் உள்ள அனைத்து உள்வாங்கல் நடவடிக்கைகளும் (CAS)பதவி உயர்வு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தை ஆட்சி குழு கூட்டம் வலியுறுத்தியது.


 மேலும் கற்பித்தல் பணியாளர்களின் உள்வாங்கல் செயல்முறை நீண்ட காலமாக தாமதம் அடைந்துள்ளதற்கு ஆட்சிக்கு கூட்டம் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உள்வாங்கல் செயல்முறை 14 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் ,. 2026 ஆம் ஆண்டு வரை பல தகுதியான ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமல் இருப்பதால் அவர்களின் பணி சார் சலுகைகள் மற்றும் தொழில் முன்னேற்றம் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளதாகவும் பேசப்பட்டது..


 தகுதி உடைய அனைத்து கற்பித்தல் பணியாளர்களின் உள்வாங்கல் செயல்முறைகளையும் மேலும் தாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்என்றும்.


 பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக அரசும் விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்க கூட்டத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டது .


 மேலும் ஜூன் 2023 ல் கோரப்பட்ட (CAS)விண்ணப்பங்கள் மூன்று ஆண்டுகள் கடந்தும் ஜூன் 2026 வரையிலும் பரிசீலனை செய்து முடிக்கப்படாத நிலையில் இருப்பது குறித்து உறுப்பினர்கள் கடும் அதிர்ப்த்தியும் ", மற்றும் கவலை தெரிவித்தனர்.  இந்த நீண்ட கால தாமதம் தகுதியான ஆசிரியர்களின் தொழில்முறை முன்னேற்றத்தை பாதித்து பல்வேறு சிரமங்களையும் ஏற்படுத்தி உள்ளதாக பேசப்பட்டது.

 மேலும் (CAS)செயல்முறையை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் ஜூன். 17-.2026 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து மனு அளிப்பது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டது மேலும் தேவைப்பட்டால் (CAS)மற்றும் ஆசிரியர் நலன் தொடர்பான பிற நிலுவைப் பிரச்சனைகளையும் குறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை  அமைச்சரிடமும், தமிழ்நாடு முதலமைச்சரிடமும்  ,நேரடியாக முறையிடவும் தீர்மானிக்கப்பட்டது.

 அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் தொழில் முன்னேற்றத்தை பாதுகாப்பதில் சங்கம் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது .

கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா ? தமிழக அரசு !

Post a Comment

0 Comments