NEWS UPDATE *** பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் - ஆய்வு செய்ய மதுவிலக்கு , கலால் துறை ஆணையர் உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் சார்பில் பேரிடர் தணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை !

13.10.2021

சர்வதேச பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தை முன்னிட்டு  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் சார்பில் பேரிடர் தணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம்  முன்னிலையில் நடைபெற்றது. 


சர்வதேச பேரிடர் பாதிப்பு குறைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் இணைந்து பேரிடர் தணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை இன்றைய தினம் நடைபெற்றது. 

மழை காலங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை விபத்துகள், கட்டட விபத்துகள், கட்டட இடுபாடுகள், இயற்கையின் சீற்றங்களால் ஏற்படுகின்ற புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பல்வேறு பாதிப்புகளிலிருந்து செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மிதவைப் படகுகள், உயிர் காக்கும் மிதவை உபகரணங்கள், கட்டட இடர்பாடுகள், அவசர கால மீட்பு இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களைக் கொண்டு ஒத்திகை நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், வருவாய்த் துறை, தீயணைப்பு மீட்புத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதல் களப் பணியாளர்களைக் கொண்டு பொது மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நடத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம்,  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான் மாவட்ட வருவாய் அலுவலர ஆலின் சுனேஜா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, துணை ஆட்சியர் (பயிற்சி)  கனிமொழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பயிற்சி) ஷபானா அஞ்சும், வருவாய் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஷ்குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முருகேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

           



--------------------------------------------------------------------------------------------------------------------------


ஆத்தூர் ர.மாலிக்

சேலம் மாவட்ட செய்தியாளர்

Post a Comment

0 Comments