அதிமுக அணி இரு பிரிவாக பிரிந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கரை கட்சி பதவியிலிருந்து பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார் . அவருக்கு பதிலாக மேற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்று கரூர் மாவட்ட அலுவலகத்திற்க்கு கட்சியினர் வந்தனர் . நேற்று மதியமே கட்சி அலுவலகம் பூட்டப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர் .
அலுவலக வாயிலில் இருந்த எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் கட்சியினர் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் . மாவட்ட செயலாளரின் அறை பூட்டப்பட்டிருந்ததால் முன் அறையில் கட்சியினர் கமலகண்ணனுக்கு மாலை அணிவித்தனர்.
இதனை அறிந்த விஜயபஸ்கரின் ஆதரவாளர்கள் சுமார் 15 பேர் வந்து கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து செல்ல நீங்கள் யார் என கேள்வி கேட்டனர் . மேலும் இதனை போலீசார் நீங்கள் வேடிக்கை பார்க்காலாமா என வாக்குவாதம் செய்தனர் .
எங்களை நியமித்தது கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்கள் எங்களை கேள்வி கேட்க உரிமையில்லை என இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்தனர் .
பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் வெளியே போக சொல்லி போலீசாரின் கட்டுப்பாட்டிற்க்கு கட்சி அலுவலகத்தை கொண்டுவந்தனர் .
இதனால் அங்கே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது


0 Comments