24.02.2022
PUMS, எசனைக்கோரை மற்றும் GHSS,வாளாடி - பள்ளிகளுக்கு இடையே பள்ளிப்பரிமாற்றம்- நிகழ்வு நடைபெற்றது. அதில் எசனைக்கோரை பள்ளியிலிருந்து ஆசிரியைகள் கீதா, மேரி கிறிஸ்டினாவும், வாளாடி பள்ளியிலிருந்து ஆசிரியைகள் வான்மதி, புனிதாவும் பரிமாற்றம் அடைந்து, மாற்றுப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளி, கிராமத்தின் சிறப்புகளை photos Videos, Power Point presentation மூலமாக விளக்கினர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமாவளவன் மற்றும் வாளாடி பள்ளி தலைமை ஆசிரியை மலர்க்கொடி ஆகியோருடன் உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வில் இலால்குடி வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் தனலெட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

1 Comments
Super ❣️
ReplyDelete