திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான புதிய தொழில்நுட்பம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மார்ச் 15, 16 ஆகிய தேதியில் இரண்டு நாள் நடைபெறுகிறது.
இந்திகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். டி.பால் தயாபரன் தலைமை தாங்கினார்,புனித சேவியரின் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். மரியதாஸ், கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்,
வணிகவியல் துறைத்தலைவர் ஞா.ஞானராஜ் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவணத்தின் இயக்குநர். ராம் கனேஷ், கருத்தரங்கின் கருப்பொருளை குறித்து விளக்கினார் ,
கேர் பிசினஸ் பள்ளியின் பேராசிரியர் வெங்கடேஷ், சாரதாஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தி மேலாண்மை இயக்குநர் ரோஷன், மற்றும் தீம் கஃபே நிறுவனத்தின் இனை நிறுவனர். குனசேகரன், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பென்னலா ஆக்னஸ் ஐ வின்,ஆகியோர் கலந்தது கொண்டனர்.
இந்நிகழ்வில் அடுத்த தலைமுறை தொழில் முனைவோருக்கான புதிய தொழில்நுட்பங்கள் சிறக்க வியபார மாதிரியான உருவாக்குவதற்கான வழிமுறைகள் தொழில் முனைவோருக்காக மாணவர்களை ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு கருப்பொருள்கள் குறித்து விவரிக்கப்பட்டன,
இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு டடீன் விக்டர் லாசரஸ் நிறைவுரை வழங்கினார். துணை முதல்வர்கள் அழகப்பா மோசஸ், ஜெ.சாமுவேல்,கிரிஸ்டோபர்,ஆசைதம்பி, சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

0 Comments