தேசிய முற்போக்கு
திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்
ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரி வர வழங்காததை கண்டித்தும் காவிரி நீரை தர
மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே
தேமுதிக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர்
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ் பிரகாஷ் கலந்து கொண்டு கண்டன
உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொடர்ந்து திமுக அரசு
மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை உயர்த்தி உள்ளது இதனால் ஏழை எளிய மக்கள்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி பாமாயில் உள்ளிட்ட உணவு
பொருட்கள் சரி வர வழங்கப்படுவதில்லை மேலும் கர்நாடகா அரசு நீர் திறந்து விடாமல்
இருக்கிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம், இதனைத் தொடர்ந்து திமுக அரசை கண்டித்து
கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தேமுதிக நிர்வாகிகள்
தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்



0 Comments