09.04.2026
எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்ளான செல்வி.மோசிகாஸ்ரீ, செல்வி.ஶ்ரீபவனிதா, செல்வி.ரசிகப்பிரியா ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியரும், இலால்குடி கிளைத் தலைவரும், மாவட்ட துணை தலைவருமான க.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் மு.மணிகண்டன், மாவட்ட இணைச் செயலாளர் கு.மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கணித செயல்பாடுகள் செய்து காண்பித்து மாணவர்களை பாராட்டி பேசினர்.
மேலும் இந்நிகழ்வில் தி.கீதா, ஜோ.மேரி கிறிஸ்டினா, து.செல்வி ஆகியோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



0 Comments