NEWS UPDATE *** கரூரில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி - செய்தியாளர்களை அரங்கிற்குள் இருந்து வெளியேற்றியதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ் தலைமையில் அருள்மிகு கனகாம்பிக்கை சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி

அருள்மிகு சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் உப கோவில்களுள் ஒன்றன அருள்மிகு கனகாம்பிக்கை சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலானது ராமாயண காலத்து தொடர்புடையாது. சுமார் 3000 முதல் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் தான் இராவணன் சீதாதேவியை கவர்ந்து சென்றபோது ஜடாயு இராவணனை தடுக்க முயன்று ராவணனால் சிறகு வெட்டப்பட்டு விழுந்ததாக தல வரலாறு கூறுகின்றது. 



மேலும் ராமபெருமான் தான் சேனைகளுடன் சீதாதேவியை தேடி வந்தபோது ஜடாயு சாட்சி சொல்லிய பின் உயிர் விட்டதாகாவும் அதே இடத்தில் ஜடாயுவிற்கு ராமபிரான் தன் பொற்கரங்களால் குளம் வெட்டி அதன் தீர்த்தம் கொண்டு நீராட்டி இறுதி சடங்கு செய்து முக்தி கொடுத்ததாகாவும் தல வரலாறானது இந்த கோவிலின் இறைவனின் பெயர் காரணத்தையும் இணைத்து சொல்லுகிறது. காலப்போக்கில் சிதிலமடைந்தும் பரிவார தெய்வங்கள் பல காணாமல் போனது. தற்போதைய திருக்கோவில் நிர்வாகம் எடுத்துவரும் சீரிய  முயற்சியால் தற்பொழுது இந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ் தலைமையிலான நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வள மாணவர்கள் தொடர்ந்து உளவாரப்பணி செய்து வருகின்றனர் இவர்களுடன்  14/07/2024 ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்சிராப்பள்ளி திருக்கயிலாய உளவாரப்பணி குழு சார்பாக 30கும் மேற்பட்ட சிவனடியார்கள் குழு இணைந்து நிறைவாக தூய்மை பணி செய்தனர்.











இந்த கோவிலை பற்றி மேலும் தகவல் அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் ( 98436 65378 - மகேஷ் குமார் ) 


**********


 
L.பாபு

தலைமை செய்தியாளர்













 




Post a Comment

0 Comments