திருச்சி உறையூர் அம்பிகா தோப்பு காவல்காரத் தெருவை சேர்ந்தவர் மகாமுனி (30). ஆட்டோ டிரைவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரது மூத்த சகோதரர் மாரிமுத்து (34). இவர் பா.ஜனாதாவில் உறையூர் பகுதி இளைஞரணி மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும் உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்த செல்லப்பா என்கிற அமீர் பாஷா (26) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் செல்லப்பாவின் உறவினர்கள் நேற்று இரவு வீடு புகுந்து மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாரிமுத்து குடும்பத்தினர் உறையூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர். அப்போது போலீசார் நாளை காலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மகாமுனி மற்றும் அவரது சகோதரர்கள் உறையூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் வினோத் என்பவர் மகாமுணியை மட்டும் விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் பா.ஜனதா நிர்வாகிகள் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
********
தலைமை செய்தியாளர்
0 Comments