NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கறிஞர்‌ முரளிகிருஷ்ணன் திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் !

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்‌ (அரசு வழக்கறிஞராகவும் உள்ளார்) முரளிகிருஷ்ணன்.




தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறு இவர் திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

@seeman4TN என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோவாக பதிவு செய்து இருந்த தனது உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும், ஆபாசமாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 


முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்தும் அவதூறு  பரப்பியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை உழைத்த ஒரு மக்கள் தலைவரை தனது சுயலாபத்துக்காக கேவலமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


தமிழக முதலமைச்சர் மீதும் கலைஞரின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சீமான் பேசியதை பார்த்து மனச்சோர்வு அடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டேன்.

நாம் தமிழர் கட்சியின் யூ டியூப் சேனலையும் முடக்கி வைக்க வேண்டும் தனது சுய லாபத்திற்காக தமிழக முதல் அமைச்சர் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ள சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் பேசி பதிவு செய்துள்ள அவரது எக்ஸ் வலைதள பக்கத்தையும், நாம் தமிழர் கட்சியின் யூ டியூப் சேனலையும் முடக்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments