NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி திருவானைக்காவல் பாலம் அருகே உள்ள மின்னழுத்த ராட்சத கோபுரம் சரிந்து விழும் அபாயம் !



காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பிறகு கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பிடப்பட்ட திடீர் தண்ணீர் வரத்தால் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ளஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம்கொள்ளிடம் ஆற்றில் மிகுதியாக வரும் வெள்ளம் காரணமாக அடிப்பகுதி அரித்துச் சரிந்து விடுகின்ற அபாயத்தில் இருக்கின்றது இதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் இன்றுவரை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் ஆவேசமாக கூறுகின்றனர் .









இதனால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் கடந்த பல மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 




**********


 L.பாபு

தலைமை செய்தியாளர்


Post a Comment

0 Comments