google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சியில் தனியார் பஸ்களின் போட்டியால் சிக்கி பலியான உயிர்
NEWS UPDATE *** வக்ஃபு மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் தனியார் பஸ்களின் போட்டியால் சிக்கி பலியான உயிர்

 

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதிஅந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54)இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி அளவில் தனதுஇருசக்கர வாகனத்தில்காய்கறி வாங்க காந்திமார்க்கெட்டிற்குசென்றார். பிறகு அங்குகாய்கறிகளை வாங்கிக் கொண்டு தன்னுடன் மற்றொரு இருசக்கரவாகனத்தில் வந்த நண்பர்ரை காய்கறி சாமான்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல கூறினார்.



இதை அடுத்து அந்தநண்பர் தனது இரு சக்கர வாகனத்தில்காய்கறிகளை ஏற்றுக்கொண்ட பொன்மலைக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து அருண் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பொன்மலை நோக்கி சென்றார்.

இவர் ஓட்டி வந்த இருசக்கரவாகனம் காந்தி மார்க்கெட்டில் இருந்து பாலக்கரை மேம்பாலம் வழியாக வேர்ஹவுஸ் மேலப்புதூர் மேம்பாலத்தில்வந்தார்.

அப்போது எதிரே திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு இரண்டு தனியார் பஸ்கள் மேலப்புதூர் வழியாக போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வந்தது பின்னர் வேர் ஹவுஸ் பாலத்தில் ஒரு தனியார் பஸ் இறக்கத்தில் இறங்கிய போது மற்றொரு பஸ் போட்டி போட்டி போட்டுக் கொண்டு வந்தது. பின்னர் எதிர்பாராத விதமாக ஒரு பஸ் அருண் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயமடைந்து அருண் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் . அங்குஇருசக்கர வாகனத்துடன் சாலையில் இறந்து கிடந்த அருண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments