NEWS UPDATE *** வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் இரண்டு குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு





தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் இரண்டு குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க மண்டப கூட்டாரங்கில் இன்று நடைபெற்றது.





விழாவில் எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் அவர்கள் தனது அச்சமற்ற இதழியல் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துக்கள் மற்றும் தனது தன்னார்வ அமைப்பின் வாயிலாக அடித்தட்டு மக்களுக்காக ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவற்றைப் பாராட்டி, 'அறிவுச்சுடர் மாமணி' எனும் 'சிறப்புப் பொன்விழா விருதும்.


இதேபோல் கிராமப்புறங்களில் அறுவை சிகிச்சை சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காகவும், புற்றுநோய் சிகிச்சையில் காட்டிய ஈடுபாட்டிற்காகவும் டாக்டர் விஜயானந்த் அவர்களுக்கு 'மருத்துவச்சுடர்' – 2026 எனும் 'சிறந்த மருத்துவச் சேவை விருதை. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி குகன் (எ) கருணாநிதி அவர்களும், நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் ஆகியோர் கேடயங்கள், பொன்னாடைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் OZONE அமைப்பின் தலைவர் டாக்டர் கோவிந்தராஜு, பத்மஸ்ரீ மராச்சி சுப்புராமன் மற்றும் திருச்சி எழுத்தாளர் சங்கத் தலைவர் இந்திரஜித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். விருது பெற்ற இருவருக்கும் விழாவில் பங்கேற்ற அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments