NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அமைச்சர் கே.என்.நேரு , அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு !

 

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வங்கிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 10 இடங்களில்.. சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில் அமைச்சரின் சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியவுடன் அங்கு திமுக தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டதின் பேரில் தற்போது சோதனை பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments