NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!!


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 



மாவட்டத் துணைத் தலைவர் ஹாபிழ் அல்லாபக்ஸ் இறைவசனம் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார். வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜமால் கண்டன கோஷங்களை எழுப்பினார். தெற்கு மாவட்ட செயலாளர் சையது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மகளிர் அணி மாநில செயலாளர் முனைவர் பைரோஸ் துவக்க உரையாற்றினார். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர் உமர் பாரூக் ஹஜ்ரத்,மாணவரணி மாநில தலைவர் அன்சர் அலி,மாநிலத் துணைச் செயலாளர் பாரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி கலந்து கொண்டு கண்டன பேருரை ஆற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் பஷீர் அலி, மண்டல ஒருங்கிணைப்பாளர் சாதிக்குல் அமீன், தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ஷேக் முகமது கௌஸ் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இறுதியாக தெற்கு மாவட்ட பொருளாளர் ஹீமாயூன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments