NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து வேலை நிறுத்த போராட்டம்

 தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்




மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, விரல் ரேகை பதிவு, ஆதார் சமர்ப்பிப்பு, 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், டி என் சி எஸ் சி எடை தராசும்,அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலை எடை தராசும் பி ஓ எஸ் விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும், ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைத்து 9வது மாநில ஊதிய மாற்ற குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும  உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 

தலைமை மாவட்ட தலைவர் பாலமுருகன் ,மாநில துணைத் தலைவர் செல்லத்துரை, முன்னிலை மாவட்டச் செயலாளர் அருணாச்சலம்,சிறப்புரை மாவட்ட பொருளாளர் பாக்கியம்,மாவட்ட நிர்வாகிகள் பவர்சிங் சிவபாண்டியன் பெருங்காம நல்லூர்பாண்டி காளியப்பன் தங்கவேலு மாயாண்டி .மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள்  என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments