NEWS UPDATE *** திமுக, தவெகவினர் இடையே மோதல் சென்னையில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த தவெகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் இதனால் திமுக, தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

 திருச்சி நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் G. N. சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ்  அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை  பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்  பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில்  திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் சிலம்பம் பயிலும் மாணவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தி பொங்கல் வைத்து பாரம்பரிய கலைகளான சிலம்பம் கம்பு வாள் கேடயம் மான் கொம்பு ஈட்டி சுருள் வாள்  சக்கரப்போத்து நட்சத்திர போத்து செடி குஞ்சு சக்கை உள்ளிட்ட கலைகளை செய்து காட்டி  சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் LIC K. சங்கர் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  சண்முகபிரியா காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் M.K. கமலக்கண்ணன் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்திகா அல்லி கொடி அகிலாண்டேஸ்வரி தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர். ஏ. தாமஸ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்









நிகழ்வில்   சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற சிலம்ப மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்த சுதர்ஷன் மூன்றாம் இடம் பிடித்த தனுஷ் ரெனிஷ் மற்றும் முதல்வர் கோப்பைக்கான சிலம்ப போட்டியில் முதல் இடத்தை  பிடித்த சிலம்ப மாணவி ஸ்ரீநிதா சிலம்ப ஆசிரியர் சேஷாத்ரி உள்ளிட்டோருக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்  தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மூத்த சிலம்ப ஆசான்கள் கலச்சுடர் ஜெயக்குமார் மணி கிருஷ்ணன் மற்றும் மாஸ்டர் மனோகரன் பயிற்ச்சியாளர்கள் நண்பர்கள் சிலம்ப கூடத்தின் ஆசான் ஜி. என். சண்முகசுந்தரம் தலைவர் வி. எஸ். ரங்கநாதன் செயலாளர் பி. சி. யுவராஜ் பயிற்ச்சி யாளர்கள் சேஷாத்ரி  கீர்த்திவர்மன் செந்தில் மற்றும் ஃகோரபாய் காயத்ரி பரிமளா கிரிஜா ஆகாஷ் இந்துஜா கீர்த்தி ஹரன் சுதர்சன் தனுஷ்  சிலம்ப மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments