உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சத்குருவின் 'காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில் "வான் அமிர்தம்" என்ற பிரம்மாண்ட மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வரும் மார்ச் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கலந்துகொண்டு விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மர விவசாயமும் காவேரி கூக்குரலும் 2019-ஆம் ஆண்டு முதல் காவேரி கூக்குரல் இயக்கம் சுமார் 1 கோடியே 20 லட்சம் மரங்களை நட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்மாறன், மர விவசாயத்தின் நன்மைகளை விளக்கினார்:
* விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
* மண் அரிப்பைத் தடுத்து, மழை நீர் பூமிக்குள் செல்ல வழிவகுக்கிறது.
* பருவநிலை மாற்றங்களைச் சீரமைக்க உதவுகிறது.
மழைநீர் சேகரிப்பு: இன்றைய கட்டாயம்
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது குறித்துப் பேசிய அவர், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் அறிவியல் பூர்வமாக மழைநீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைப்படி, குடிநீரின் TDS அளவு 300-க்குள் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் பல இடங்களில் இது 750 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் சிறுநீரகக் கற்கள் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மழைநீரை முறையாகச் சேமித்து வடிகட்டுவதன் மூலம் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்."கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள் இந்தக் கருத்தரங்கில் நீர் மேலாண்மை குறித்த ஆழமான புரிதலை வழங்கப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
* நிபுணர்கள் ஆலோசனை: மத்திய நிலத்தடி நீர் வாரிய முன்னாள் இயக்குனர் சிவகுமார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் நீர் மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எளிய சேமிப்பு முறைகளை விளக்க உள்ளனர்.
* நவீன தொழில்நுட்பம்: பெங்களூரைச் சேர்ந்த 'தண்ணீர் அறிஞர்' அய்யப்ப மாசாகி, குறைந்த செலவில் மழைநீரை பூமிக்குள் செலுத்தும் வித்தைகளை விவசாயிகளுக்குக் கற்றுத் தரவுள்ளார்.
* விருதுகள்: நீர் மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
* கண்காட்சி: நவீன மழைநீர் சேகரிப்புக் கருவிகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற உள்ளது. மழை நீர் தான் உலகிலேயே மிகத் தூய்மையான நீர் என்று டபிள்யூ ஹெச் ஓ அறிவித்துள்ளது மழைநீர் சேகரிப்பு மூலமாககுடிநீர் பஞ்சமே இருக்காது அந்த நீரை சேகரித்து சுத்திகரித்து குடித்தால் எந்த ஒரு நோய் பாதிப்பு ஏற்படாது என்று கூறுகிறார்கள் இதன் காரணமாக மழைநீர் சேகரிப்பது முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை எஸ் ஆர் எம் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது அனைவரும் கலந்து கொள்ளுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பத்திரிகையாளார் சந்திப்பில் தமிழ்மாறன் அறிவித்துள்ளார்


0 Comments