NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது

திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம்  இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் , உதவி மின்பொறியாளராக பார்த்திபன் என்பவவர் பணிபுரிந்து வருகிறார்.




திருச்சி மாவட்டம், T.இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு அவரது விவசாய நிலத்திற்கு அரசால் வழங்கப்படும் இலவச மின் இணைப்பை வழங்கியமைக்காக உதவி மின் பொறியாளர் ரூ.10000/- கையூட்டு கேட்டு, பின்னர் குறைத்து கொண்டு ரூ.5,000/- ஆக லஞ்சம் கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று 04.03.2026 மாரியப்பன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று புதன்கிழமை 04.03.2026 ந் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதவி மின்பொறியாளர் பார்த்திபன் லஞ்சப்பணம் ரூ.5000/-ஐ மாரியப்பனிடமிருந்து திருச்சி மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

இது தொடர்பாக திருச்சி, மருங்காபுரி மின்பொறியாளர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments