NEWS UPDATE *** பல்லாவரம், திரிசூலத்தில் நேற்று இரவு சிறுவன் உட்பட இரண்டு பேர் கொலை முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம்(20), சதீஷ்(17) ஆகியோரை கொலை செய்த மர்ம கும்பல். இரட்டை கொலை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் பெண் நடன கலைஞர் தூக்கிட்டு தற்கொலை !!!

திருச்சி, மார்ச் 10 

திருச்சி செந்தண்ணீர்பும் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.



இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ந்தேதி துபாயில் இருந்து திருச்சிக்கு திரும்பி விட்டார். இதையடுத்து கடந்த 7ந்தேதி இவர் வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments