NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தமிழக வெற்றிக் கழகத்தினர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நேற்று திருச்சியில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் 



குடமுருட்டி கரிகாலனின் ஆலோசனையின்படி, மலைக்கோட்டை பகுதி இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட்டச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொண்டர்கள் திரளாகக் கூடி பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சதீஷ், கிருஷ்ணமூர்த்தி, ஜோதிஷ், தீபாமணி, தமிழழகன், முருகன், தியாகு, சந்தோஷ், வல்லரசு, பிரவீன் குமார், திவாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Post a Comment

0 Comments