மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் உடல் உறுப்புகளை கொடையாக அளித்த குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர். புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளி மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரால் கொடையாக வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் க.பாண்டியன் (36). வா்ணம் பூசும் தொழிலாளி. இவா், அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தாா். பின்னர்அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை, மேல் சிகிச்சைக்காக உறவினா்கள் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.அந்நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவது குறித்து அவரது மனைவி பா. அபிராமி மற்றும் அவர் உறவினா்களுக்கு மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.
அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, அறுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் , உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து வைத்துள்ளோருக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் க.சி.நீலமேகம், துணைத் தலைவர் வெ. இரா. சந்திரசேகர்,துணைச் செயலர் இரா. இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலர் ஆர்.கே. ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அபிராமி பாண்டியன், மகள்கள் பா.சாய் ஸ்ரீஜா, பா.நித்யலெட்சுமி மற்றும் அவரது தாயார் க.பழனியம்மாள் ஆகியோரின் ஈகைச் செயலைப் பாராட்டி நிதியாக ரூ10000,/வழங்கினார். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகம், திருக்குறள் புத்தகம், கதர் ஆடை அணிவித்து, சான்றிதழ் வழங்கி நன்றி தெரிவித்தனர்.


0 Comments