திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மலைக்கோட்டை வடக்கு பகுதியில் தீவிர பிரச்சாரம்- பகுதி செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கிரேன் மூலம் மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு
திருச்சி அதிமுக கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் இன்று மலைக் கோட்டை வடக்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மலைக்கோட்டை வடக்கு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் ராஜசேகர் அவர்களுக்கு பகுதி செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கிரேன் மூலம் மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பாளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மாநில பேரவை துணை செயலாளர் ஜஹகர், இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், பேரவை இணை செயலாளர் பொன்னார், பாசறை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை அன்பழகன், வாசுதேவன், வெங்கட் பிரபு, சுரேந்தர், ரோஜர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ராதா, புத்தூர் ரமேஷ், அப்பா குட்டி, திருச்சி நாகு, கிஷோர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாக்கு கேட்டு வரும் வேட்பாளருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


0 Comments