NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்!



முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் M. தாஜுதீன் அவர்களின் ஏற்பாட்டில், GVN RIVERSIDE HOSPITAL மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை இணைந்து  மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது 




நாள்: 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை குருவி மண்டபம், எம்.ஜி.ஆர் ராஜவீதி, அண்ணாநகர், வடக்கு காட்டூர். நடைபெற்றது

இந்த முகாமினை அமைச்சர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கொள்பவர்கள் அனைவருக்கும் பவர் கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.

முகாமில் செய்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்:

பார்வை குறைபாடுகள் (Refractive Error)

முதியோர் கண் குறைபாடுகள் (ARMD)

கண்நூரை பரிசோதனை (Cataract)

குழந்தைகள் கண் குறைபாடு (Pediatric Vision Problems)

சர்க்கரை கண் நோய் (Retinopathy)

கண் நீர் அழுத்தம் (Glaucoma)

இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் (GRBS)

இரத்த அழுத்தம் (Blood Pressure)

ECG பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

உடல் எடை உயரம் மற்றும் எலும்பு அடர்த்தி (Bone Density)

பல் மருத்துவம் (Dental)

காது, மூக்கு, தொண்டை மருத்துவம் (ENT - மதியம் 1 மணி முதல் 3 மணி வரை)

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு

மார்பக பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டது. 

முகாமில் மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments