NEWS UPDATE *** உள்துறை அமைச்சர் பாதுகாப்பில் குறைபாடு - 5 அதிகாரிகள் இடைநீக்கம் மேற்கு வங்கத்தில் அமித்ஷா சென்ற வாகன பேரணியில் பாதுகாப்பு குறைபாடு. போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் அதிரடி இடைநீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரசுப் பேருந்து ஒன்றின் முகப்பில் உள்ள டிஜிட்டல் திரையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் - போக்குவரத்துத் துறை விளக்கம்



திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரசுப் பேருந்து ஒன்றின் முகப்பில் உள்ள டிஜிட்டல் திரையில், திடீரென நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. வழக்கமாக பஸ் செல்லும் வழித்தடத்தை அறிவிக்க வேண்டிய ஸ்கிரீனில், அரசியல் கட்சியின் பெயர் இடம்பெற்றது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை இது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளது





தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த திருச்சி மண்டலப் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரசு பேருந்தின் பதிவு எண் TN 45 M 4853 அந்தப் பேருந்தின் பதிவு எண் TN 45 M 4853 ஆகும்.. இந்தப் பேருந்து திண்டுக்கல், திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் அதிவிரைவுப் பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் பேருந்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வழித்தடப் பலகையில், ஊர்களின் பெயருக்குப் பதிலாக தமிழக வெற்றிக் கழகம் என்ற வாசகம் ஆங்கிலத்தில் மின்னியது.. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் தொடக்கத்தில் குழப்பமடைந்தனர்.. ஒரு அரசுப் பஸ்ஸிலேயே அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தப்படுகிறதா அல்லது இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்ற கேள்விகள் எழுந்தன. அரசு பஸ் போர்டில் டெக்னிக்கல் பிரச்சனை? இதற்கிடையில், சாலையில் சென்றவர்கள் இதனைத் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய விவாதப் பொருளானது..

இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியது.. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இது ஒரு திட்டமிடப்பட்ட மர்மச் செயல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை அதாவது மதர்போர்டை ஹேக் செய்து, இத்தகைய தவறான வாசகங்களைப் பதிவிட்டதும் கண்டறியப்பட்டது.. அரசுப் பேருந்து ஒன்றின் தொழில்நுட்ப கட்டமைப்பில் புகுந்து இத்தகைய மாற்றத்தைச் செய்திருப்பது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.. மதர்போர்டு மாற்றம் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்துத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.. இச்சம்பவம் நேற்று கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்தப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் இருந்த மென்பொருள் அமைப்பை ஹேக் செய்து, பிறகு மதர்போர்டு மாற்றப்பட்டது.

அதில் மீண்டும் சரியான வழித்தட விவரங்கள் அப்லோடு செய்யப்பட்டு பஸ் இயக்கப்பட்டது.. மேலும், இது போன்ற தேவையற்ற மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், டிஜிட்டல் பலகை சேவை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

Post a Comment

0 Comments