NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

த வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் - சமூக நீதி பேரவை



மக்கள் சமூக நீதி பேரவையின் பொது செயலாளர் பேட்டியளித்தார் அப்போது கூறியதாவது .......






இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் S.R.பொம்மை எதிரிடை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் ஆளுநர் தனிப்பெரும் கட்சியினை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் . தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர , ஆளுநர் மாளிகை அல்ல . தமிழக ஆளுநர் உடனடியாக தா வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் . தனி மெஜாரிட்டியை நிரூபிக்க கோருவது , ஆளுநரின் அதிகார வரண்பூ மீறிய செயல் BJP ன் கைப்பாவையாக செயல்படுகிறார் , இது கண்டிக்கதக்கதாகும் .







தமிழக ஆளுநர் உடனடியாக த வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என மக்கள் சமூக நீதி பேரவை சார்பாக அறிவிப்பு அனுப்பியயுள்ளோம் . வருகிற 11.05.2026 தேதியன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யவுள்ளோம்
மக்கள் சமூக நீதிப்பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் ஆளுநரை கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளோம் . வருகிற 11.05.2026 அன்று த வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளோம்.







மாநில சுயாட்சியில் உண்மையான அக்கறை தி மு க அரசுக்கு இருந்தால் ஆளுநரை கண்டித்து ஸ்டாலின் போராட வேண்டும் . இல்லையேல் தி மு க விற்கும் பா ஜ க விற்கும் கள்ளக்கூட்டு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் .


ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சி வெடிக்கும் என ஆளுநருக்கு எச்சரிக்கிறோம் என பேட்டியளித்தார்

Post a Comment

0 Comments