NEWS UPDATE *** கரூர் நெரிசல் - அரசுப்பணி வழங்கியது ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி சிவா வீடு முற்றுகை வழக்கில் காங்கிரசார் நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கறிஞர் சரவணன், ராஜேந்திர குமார் பங்கேற்பு

 

திருச்சி ஜூன் 15-

பெருந்தலைவர் காமராஜர்  பற்றி உண்மைக்கு புறம்பாக இழிவாக பேசிய திமுக மாநில துணை பொது செயலாளர்  ராஜ்யசபா எம்.பி.  திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் அவரது வீட்டை முற்றுகையிடும்போராட்டம் நடந்தது. 



இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் நீதிமன்றம் முன்பு தடுத்து நிறுத்தி கைது செய்து வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் அடைத்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், மாரியப்பன், ராஜ்மோகன்,  நிர்மல் குமார், வினோத் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி பரம்வீர் முன்னிலையில் வந்தது. இதில் மேற்கண்ட ஐந்து பேரும் ஆஜராகினர். இவர்களுக்கு  ஆதரவாக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,  பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், வழக்கறிஞர்கள் விக்னேஷ், மோகம்பால், அப்துல் சலாம், சுகன்யா ஆகியோர் ஆஜராகினர். 

மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், ஐ என் டி யு சி மாவட்டத் தலைவர் சங்கர், பரத், மணிகண்டன், குமாஸ்தா விக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments