NEWS UPDATE *** "கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளனர்" பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா பேட்டி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி மேலரண் சாலை தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் !

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி மேலரண் சாலை தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ் தாய் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி எழுதமிழ் இயக்கம் சார்பில் நடைபெற்றது.



எழுதமிழ் இயக்கத்தின் பட்டையத் தணிக்கையர் குமாரசாமி, தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து தமிழ்ச்சங்கத்தின் உதயகுமார், எழுதமிழ் இயக்கத்தின் கோவிந்தசாமி, மாரிமுத்து, தூய வளனார் கல்லூரி பேராசிரியர் ரவீந்திரன், பாப்பு பெஞ்சமின் இளங்கோ காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் முரளி  ஸ்ரீரங்கம் காபி பாலசுப்பிரமணியம்  உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தனர். 

தீர்மானம் :

*தமிழ்நாட்டுக்கென மாநிலக் கொடி வேண்டும் எனவும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழகத்திலும் தமிழ் மொழி பாடம் அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாய பாடமாக்க வேண்டும்,


* தமிழ் கல்வெட்டுகளை முறையாக பாதுகாக்க வேண்டும்,


*தமிழில் பாரம்பரிய சிலைகள் பதிவுகள் சான்றுகள் போர் கருவிகள் ஆகியவற்றை அரசு ஆவணம் செய்ய வேண்டும்,


*தமிழ் மொழியை பாராட்டிய சான்றுகளை உலக அமைப்புகள் மூலம் திரட்டப்பட வேண்டும்,

*திருக்குறளை வாழ்வியல் நூலாக இல்லந்தோறும் இலவசமாக வழங்க வேண்டும்,

*தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆவணம் செய்ய வேண்டும்,

*திருவள்ளுவர் தினத்தை திருவிழாவாகக் கொண்டாட ஆவன  செய்யவேண்டும்,

அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments