திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், King Makers IAS Academy மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்திய உனக்குள் ஓர் ஐஏஎஸ், மேலும் UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி என்ற தலைப்பில் வழிகாட்டும் இலவச கருத்தரங்கம் மற்றும் 100% வரை கட்டண சலுகை பெற நுழைவுத் தேர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாவட்டம் மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, King Makers IAS Academy இயக்குனர் திரு. சத்யஸ்ரீ பூமிநாதன், இந்து தமிழ் திசை பத்திரிக்கையாளர் திரு. முருகேசன், King Makers IAS Academy மேலாளர் கல்யாண் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து நுழைவுத் தேர்வுகளில் எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் வெல்வது எப்படி என்ற அறிவுரைகளைக் கேட்டு பயனடைந்தார்கள்.
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர்




0 Comments